Saturday 17 March 2012

ஹும்மூஸ்


இதெல்லாம் உங்க வீட்ல இருக்கான்னு செக் பண்ணிக்குங்க

சிக் பீஸ் - 1 கேன்(கர்பன்சோ பீன்ஸ்னும் போட்டிருக்கும்)
1 பல் பூண்டு
எலுமிச்சம் பழ ஜூஸ் - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தஹீனா (அதாவது வறுத்து அரைச்ச வெள்ளை எள்) இதுவும் ரெடிமேடா கிடைக்குது - 4 ஸ்பூன்
ஆலிவ் எண்ணை - 4 ஸ்பூன்
பேப்ரிகா தூள் - 1/2 ஸ்பூன்


இப்போ சிக் பீஸ்(வேகவைத்த வெள்ளை சுண்டல் கடலை) ,பூண்டு,தஹீனாவை மிக்சியில கொட்டி ஒரு 2-3 ஸ்பூன் தண்ணி சேர்த்து(இல்லன்னா அரைய கஷ்டம்) முக்கால் பாகம் அரைஞ்சதும் மூடி திறந்து லெமன் ஜூஸ் சேர்த்து உப்பும் சேத்து திரும்ப அரைக்கனும்
இப்போ உப்பு சரியான்னு பார்த்து அரைஞ்சதும் போதும்னா ஒரு பரந்த செர்விங் பவுளில் கொட்டி நடுவில் குழி செய்து ஆலிவ் எண்ணை ஊற்றணும்.
பிறகு அலங்காரத்திற்கு ஒரு கத்தி முனையில் ஆலிவ் எண்ணையை தொட்டு பாப்ரிகா பொடியிலும் தொட்டு மூனு மூனு கீரல் அங்கங்க போடனும்..இப்படி கஷ்டமா சும்மா லேசா தூவி விட்டுக்கலாம்..வெள்ளைக்கு சிவப்பு கான்ட்ராஸ்டா இருக்கும்.
பிறகென்ன குபூஸ் அதாவது பீட்டா ப்ரெட்டை இதில் தொட்டு  சாப்பிட வேண்டியது தான் 

குறிப்பு
========
சிலர் சும்மாவே சாலட் சேத்தே சாப்பிடுவாங்க.நாம இது கூட நம்ப டேச்ட் ரசனைக்கு தகுந்த மாதிரி சும்மாவே சாசேஜ்,க்ரில்ல்ட் சிக்கன்,கபாப்,டூனா மீன் ரோஸ்ட்,க்ரில்ட் மீன் இல்ல பருப்பு வடை,பகோடா கூட தொட்டு சாப்பிட்டிருக்கேன்

  ஒரு கேன் சிக் பீஸ் இல் ஒரு நாலு அஞ்சு எடுத்து வச்சுட்டு கடைசியில் குழியில ஆலிவ் எண்ணையில் முழு சிக் பீஸை போட்டு பரிமாறினால் பாக்க அழகா இருக்கும்..நான் மறந்துட்டேன்

சொந்த கதை
=============
இது எனக்கு என் மாமனார் தான் சொல்லி தந்தார்...பிறகு நான் செய்வதை பாத்து எங்க குடும்பத்தில்,பக்கத்து வீட்டில் நிறைய பேர் கத்துக்கிட்டாங்க.அவர் அருமையாக சமைப்பார்.கல்யாணமாகி வந்தவுடனே அவர் சொல்லி தந்த முதல் குறிப்பு இது தான்..

2 comments:

  1. வாழ்த்துக்கள்,சூப்பர். பார்க்கவே யம்மியாக இருக்கு.தொடர்ந்து குறிப்பும்,மற்ற மனதிற்கு பிடித்தவற்றையும் பகிருங்க.பழைய ப்ளாக் போஸ்ட் செய்ய பிரச்சனை என்றால்,அதனை பேக்கப் செய்து விட்டு பழைய குறிப்புகளை இங்கே மாற்றி விடுங்கள்.

    ReplyDelete
  2. கண்டிப்பா ஆசியாக்கா..எனக்கு பிடிச்ச ஒரு நபரது முதல் பதிவாக நீங்க வந்திருக்கீங்க.இனி தொடங்க வேண்டியது தான்..பழையதிலிருந்து கடத்தி விடுகிறேன்

    ReplyDelete

ப்லீஸ் பாத்து யோசிச்சு கமெண்ட் பண்ணுங்க